அமெரிக்காவில் போலி ‘ஏ.டி.எம்.’ கார்டுகளுடன் இலங்கை வாலிபர்கள் கைது!
அமெரிக்காவில் நியூயார்க் நகரிலுள்ள வங்கி ஏ.டி.எம். மையத்தை சுற்றிவந்த 2 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அப்போது இவர்களிடம் 257 போலி ஏ.டி.எம். கார்டுகள், ரூ.30 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. விசாரணையில் போலி கார்டு மூலம் பணத்தை எடுத்திருப்பதும் தெரியவந்தது.
இதனை அடுத்து சிவரூபன் ஞானபண்டிதன்(வயது 28), ராகவன் பத்மாசேனன்(24) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இலங்கையை சேர்ந்த இந்த இருவரும் தற்போது கடனாவில் வசித்து வருபவர்கள்.
0 comments :
Post a Comment