ஈராக் பெருமளவு ஆயதங்களை கொள்வனவு செய்கிறது. அடுத்து நடக்கப்போவது என்ன?
ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்தில் ஈராக் கைச்சாத்திட்டுள்ளது. அதற் கமைய 4.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஆயுதங் களை ஈராக் கொள்வனவு செய்யவுள்ளதாக ரஷ்ய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சதாம் உசைனின் காலப்பகுதியிலிருந்து ஈராக்கிற்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் பிரதான நாடாக ரஷ்யாக காணப்படுகிறது.
இரு நாட்டு பிரதமர்களுக்குமிடையில் மொஸ்கோவில் இடம்பெற்ற விசேட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதல் ஹெலிகொப்டர்கள், ஏவுகணைகள், கனரக ஆயுதங்கள் என்பன அவற்றில் உள்ளடங்குகின்றன.
இதன் மூலம் ஈராக்கின் இராணுவ பலம் மீள கட்டியெழுப்பப்படுமென அந்நாட்டு அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை ரஷ்யாவைத் தவிர வேறு நாடுகளின் ஆயுத ஏற்றுமதியை அங்கீகரிப்பதன் மூலம் ஈராக்கின் தனித்தன்மையை பாதிக்க இடமளிக்கப் போவதில்லையென அந்நாட்டு பிரதமர் நூரி மலிகி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment