சண்டே லீடர் முன்னாள் ஆசிரியர் பிரட்ரிக்காவின் புகலிட கோரிக்கை அவுஸ்திரேலியாவால் நிராகரிப்பு
இலங்கையில் தனக்கு உயிர் ஆபத்து இருப்பதாக தெரிவித்து, சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் பிரட்ரிக்கா ஜேன்ஸி விண்ணப்பித்த புகலிடக் கோரிக்கையை அவுஸ்திரேலியா நிராகரித்துள்ளதாக அவுஸ்திரேலிய பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
மனிதாபிமான அடிப்படையில் தன்னை அவுஸ்திரேலியாவில் குடியேற அனுமதிக்கும்படி பிரட்ரிக்கா ஜேன்ஸி கொழும்பி லுள்ள அவுஸ்திரேலிய தூதரகத்தினூடாக விண்ணப்பித்தி ருந்தார். எவ்வாறாயினும் பிரட்ரிக்கா ஜேன்ஸிக்கு எவ்வித அச்சுறுத்தலும் இலங்கையில் இல்லை என தெரிவித்து அவுஸ்திரேலியா அக்கோரிக்கையை நிராகரித்துள்ளதாக அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment