விமர்ச்சிப்பதையே தொழிலாக கொள்ளாமல் நன்மை தரக்கூடியவை தொடர்பில் கவனம் செலுத்துக
த.தே.கூ அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்ச்சிப்பதை தவிர்த்து, மக்களுக்கு நன்மையளிக்க கூடிய செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச கோட்டுக்கொண்டுள்ளார். சமுர்த்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தரகள் சங்கத்தின் பிரதி நிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அதனை தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், திவிநெகும திட்டத்தின் மூலம் வறிய மக்கள் நன்மையடையக்கூடிய சகல விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன என்றும், இத்திட்டமூலத்தின் மூலம் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் அரசாங்க உத்தியோகத்தர்கள் பெறும் அனைத்து சலுகைகளையும் பெற்றுவதுடன், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் நிரந்தர ஓய்வூதியத்தை பெறுவார்கள் என்றும், திவிநெகும சட்ட மூலத்தை பற்றிய தெளிவு அல்லாதவர்கள் அதைப்பற்றி விமர்விக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment