Saturday, October 20, 2012

கே.பி அரச தரப்பு சாட்சியாக செயற்ப்பட்டு வருபவர்! கே.பி. பொதுமன்னிப்பு வழங்கவில்லை கெஹெலிய

எல்.ரீ.ரீ.ஈ யினரின் சர்வதேச விவகார ங்களுக்கான முன்னாள் தலைவர் குமரன் பத்மநாதனின் பங்களிப்புடன் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் நடாத்தி வரும் பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதாகவும், அரச தரப்பு சாட்சியாக செயற்ப்பட்டு வரும் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாத னுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவில்லை யெனவும், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக வியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு முடிவுகளை அறிவி க்கும் போதே அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்துள்ளார்.

சர்வதேச மட்டத்தில் இலங்கை பிரச்சினை தொடர்பில் பேசப்பட்டு வருகிறது. குறித்த நிலையில் சில சமயங்களில் நெகிழ்வு போக்கை கடைபிடிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது எனவும், எமக்கு புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடனும் செயற்பட வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டி யுள்ளார்.

மேலும் யுத்தத்தின் ஊடாக பயங்கரவாதம் ஒழிக்கப் பட்டுள்ளது. எனினும் இனப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வு ஏற்படவில்லை எனவும், குறித்த பிரச்சினைக்கு சுமூகமான முறையில் தீர்வு எட்டப்பட்ட வேண்டும் எனவும், மேலும் பாராளுமன்றத்தில் பயங்கரவாததத்துடன் தொடர்பு பட்டிருந்தவர்கள் நாட்டை தீ வைத்தவர்கள் போன்றவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர் எனவும், இந்நிலையில் கே.பி. தொடர்பிலும் அத்தகைய நிலையே உள்ளதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com