அமெரிக்க தூதரக தாக்குதலை நடத்தியவர் யார் என்று கண்டுபிடித்தது லிபிய அரசு
உலகின் பல நகரங்களிலும் அமெரிக்க தூதரகங்கள் மீதான தாக்குதல், லிபியா, பென்காசி நகரில் இருந்த அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டதுடன் அமெரிக்க தூதர் கொல்லப்பட்டடும் இருந்தார். அந்தத் தாக்குதலை திட்டமிட்டு நடத்தி முடித்த நபர் யார் என்பதில் குழப்பம் இருந்துவந்தது. தற்போது, குழப்பத் துக்கு விடை கிடைத்துள்ளது.
அஹ்மட் அபு கத்தாலா என்பவர்தான் அந்த தாக்குதலின் பின்னணியில் இருந்த நபர் என லிபிய அரசு அறிவித்துள்ளது. இந்த நபர், பென்காசி நகரில் இருந்து இயங்கிய 'அன்சார் அல்-ஷாரியா' என்ற தீவிரவாத அமைப்பின் ராணுவத் தளபதி. தூதரகம் தாக்கப்பட்ட இரவு அஹ்மட் அபு கத்தாலா, தாக்குதல் நடத்தியவர்களை தலைமையேற்று அழைத்துச் சென்றதை நேரில் பார்த்த சாட்சிகள் உள்ளனர் என லிபிய அரசு தெரிவித்துள்ளது.
ஆனால் தூதரகம் தாக்கப்பட்ட நேரத்தில், தூதரக வளாகத்தில் அஹ்மட் அபு கத்தாலா இருந்தார் என்பதற்கு எம்மிடம் ஆதாரம் கிடையாது' என்று கூறியுள்ள லிபிய அரசு, இந்த நபர், தாக்குதலை திட்டமிட்டு கொடுத்தார் என்பதை உறுதி செய்யலாம்' என கூறியுள்ளது.
0 comments :
Post a Comment