போலி நாணத்தாள்களுடன் ஒரு பெண் அடங்கலாக ஆறுபேர் பொலிஸாரால் கைது
போலி ஆயிரம் ரூபா நாணயத்தாள்களுடன் ஆறு சந்தேகநபர்கள் ஹூங்கம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ஐந்தரை இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுள்ள நாணயங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. நாணயத்தாள்களை அச்சிடுவதற்குப் பயன்படுத்திய உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.
ஹொரணையில் குறித்த நாணயத்தாள்களை அச்சிட்ட சந்தேகநபர்கள் அவற்றை மாற்றுவதற்காக வேறொரு பகுதிக்கு கொண்டு சென்று மாற்றிவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
கைது செய்யப்பட்டவர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாகவும் ஆயிரம் ரூபா நாணயத்தாள்கள் 550 கைப்பற்றப்பட்டதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயக்கொடி குறிப்பிட்டார்.
போலி நாணயத்தாள்கள் தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்தோடு சம்பவம் தொடர்பிலும் மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment