சரத் பொன்சேகா மேற்கொண்ட முயற்சி படுதோல்வி
கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் சரத் பொன்சேகா மற்றும் தேசிய பிக்கு முன்னணி ஏற்பாடு செய்த பொதுக் கூட்டம் படுதோல்வியில் முடிவடைந் துள்ளது பொன்சேகாவின் கூட்டத்தை அனைத்து எதிர்க்கட்சிகளும் பகிஷ்கரி த்ததால் கூட்டம் பாரிய தோல்வியடை ந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
சரத் பொன்சேகாவின் தேசிய ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான அர்ஜூன ரணதுங்க, மற்றும் டிரான் அலஸ் ஆகியோரும் கூட்டத்தை பகிஷ்கரித்துள்ளனர்.
பொன்சேகா அனைத்து கட்சிகளுக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தார். எனினும் ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி உட்பட அனைத்து கட்சிகளும் கூட்டத்தை பகிஷ்கரித்திருந்தனர். இதனால் கூட்டத்திற்கு சிறிய எண்ணிக்கையிலானோரே கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment