Thursday, October 18, 2012

லண்டன் ஹீத்ரோ ஏர்போர்ட்டில் சிக்கிய டாக்டர், அடையாளம் தெரிந்தது! கோர்ட்டில் ஆஜர்!!

லண்டன் ஹீத்ரோ ஏர்போர்ட்டில் வந்து இறங்கியபோது கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர், 26 வயதான டாக்டர், பிரிட்டிஷ் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டார். எகிப்து தலைநகர் கய்ரோவில் இருந்து வந்திறங்கியபோது கைது செய்யப்பட்ட பிரிட்டிஷ் பிரஜையான இவர், தீவிரவாதிகளின் டாக்டராக இருந்தார் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் யார் என்பதை ரகசியமாக வைத்திருந்த பிரிட்டிஷ் உளவுத்துறை, கோர்ட்டில் அவரது பெயரை வெளியிட்டது. ஷாஜூல் இஸ்லாம் என்ற பெயருடைய இவர், டாக்டர் பட்டத்துடன், பயோ-கெமிஸ்ட்ரியில் பர்ஸ்ட் கிளாஸ் டிகிரியும் வைத்துள்ளார். டாக்டராக பிராக்டிஸ் செய்ய யூனிவர்சிட்டி ஆஃப் லண்டன் ஹாஸ்பிட்டலால் பயிற்றுவிக்கப்பட்டவர்.

இவருடன் கைது செய்யப்பட்ட 26 வயது பெண், இவரது மனைவி என்று கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு 1 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. (குழந்தையும், இவர்களுடன் பயணம் செய்திருந்தது)

சிரியாவில் யுத்தம் நடைபெற்ற பகுதிகளில் செய்தி சேகரிக்கச் சென்ற பிரிட்டிஷ் போட்டோகிராபர் ஜான் கான்ட்லி, அவரது சக போட்டோகிராபர் நெதர்லாந்தைச் சேர்ந்த ஜெரோவென் ஆர்லிமென்ஸ் ஆகிய இருவரும், சிரியாவில் தீவிரவாத அமைப்பினரால் கடத்தப்பட்டு அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தீவிரவாதிகள் அனுப்பிய டாக்டர் இவர்தான் என்கிறது பிரிட்டிஷ் உளவுத்துறை.

கருப்பு நிற கூட் அணிந்து ஆஜரான டாக்டர் ஷாஜூல் இஸ்லாம், தமது பெயர், முகவரி, பிறந்த தேதி ஆகியவை பற்றி கேட்கப்பட்டபோது மட்டும் பதில் சொன்னார்.

ஷாஜூல் இஸ்லாமுக்காக கோர்ட்டில் ஆஜரான வக்கீல் மொஹாமெட் ஹூசேன், “இந்த இளைஞர் டாக்டர் பட்டத்துடன், பயோ-கெமிஸ்ட்ரியில் பர்ஸ்ட் கிளாஸ் டிகிரியும் வைத்துள்ளார். இவருக்கு இந்த நாட்டில் (பிரிட்டனில்) NHS டாக்டராக நல்ல எதிர்காலம் உள்ளது. எனவே தீவிரவாத அமைப்பினருக்கு டாக்டராக செயல்பட்டதை கடுமையான குற்றமாக எடுக்கக்கூடாது” என வாதிட்டார்.

வழக்கு விசாரணை நவம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இப்படியான விசாரணைகளின்போது, பிரிட்டிஷ் பிரைவசி ஆக்ட் சட்டங்கள் காரணமாக போட்டோ எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால், மீடியாக்காரர்கள், கோர்ட்டில் ஆஜர் செய்யப்படும் நபரை பார்த்து, ஸ்கெட்ச் சித்திரமாக வரைந்து பிரசுரிப்பதற்கு அனுமதி உண்டு.

ஷாஜூல் இஸ்லாமை அப்படி வரையப்பட்ட ஸ்கெட்ச் சித்திரம், மேலே தரப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com