சரத் பொன்சேகாவுக்கு கயிறு! பபாவுடன் தயாசிரி வெளிநாட்டில் டான்ஸ்
அக்டோபர் 18 ம் திகதி ஹைட் பார்க்கில் சரத் பொன்சேகா நடத்தும் கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்றும், அப்படிக் கலந்து கொள்பவர்களின் உறுப்புரிமை பறிக்கப்படும் என்றும், ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கடந்தவாரம் அறிவித்தது.
இதைப்பற்றிக் கவலைப்படாத ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர, தான் கட்டாயம் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதாகவும் தன்னோடு மேலும் பல ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள் என்றும் ஏற்கவே கூறியிருக்கிறார்.
எனினும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதாகக் கூறப்படும் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்களான கரு ஜயசூரியா, பாலித ரங்க பண்டார, ஹரின் பெர்ணான்டோ போன்றவ்கள் தமது பங்குபற்றலை இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
இதே வேளையில் சரத் பொன்சேகாவை ஏமாற்றி விட்டு பாராளுமன்ற உறுப்பினர் பபாவுடன் தயாசிரி வெளிநாட்டில் டான்ஸ் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
0 comments :
Post a Comment