வெளிநாட்டு ஆயுததாரிகள் சிரியாவிற்குள் நுழைவு! போர் உச்சக்கட்டத்தை நெருங்கும்- ஐ.நா. எச்சரிக்கை
சிரியாவில் இடம்பெறும் வன்முறை களில் வெளிநாட்டு பயங்கரவாதிகளின் தலையீடு அதிகரித்துள்ளதாகவும், 100 க்கும் அதிகமான வெளி நாடுகளைச் சேர்ந்த ஆயுததாரிகள் சிரியாவிற்குள் நுழைந்துள்ளனர் எனவும், இது கண்டிக்கப்படவேண்டிய செயல்என ஐ.நா.மனித உரிமைகள் ஆணையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் எதிர்வரும் நாட்களில் குறித்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென ஐக்கிய நாடுகள் சபை அச்சம் வெளியிட்டுள்ளதுடன், இதனால் அங்கு அபாயகரமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக சிரியாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை மீறல்கள் தொடர்பான புலன் விசாரணை அதிகாரி பௌலோ சேர்ஜியோ தெரிவித்துள்ளார்.
சிரியாவிற்குள் வெளிநாட்டு பயங்கரவாதிகள் உள்நுழைந் துள்ளமைக்கு போதுமான ஆதாரங்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் சிரியாவை முழுமையாக கைப்பற்றுவதற்கான திறன் அந்நாட்டு கிளர்ச்சியாளர்களிடம் காணப்படவில்லை எனவும் இதனால் ஜனநாயகம், சுதந்திரம் என்பவற்றை மீறி தமது நோக்கத்திற்கமைய அவர்கள் செயற்படுவதாக பௌலோ சேர்ஜியோ சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை வெளிநாட்டு ஆயததாரிகளினால் சிரியாவில் ஏற்ப்பட்டுள்ள அழுத்தங்கள் தொடர்பிலான முதற்கட்ட அறிக்கை மனித உரிமை ஆணையகத்தினால் ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment