நான் கோமாவில் இருந்த போது சொர்க்கத்தை பார்த்தேன் - அமெரிக்க நரம்பியல் வைத்தியர்
உயிரோடு இருப்பவர், சொர்க்கத் துக்கு சென்று வந்துள்ளேன் என்ற சொன்னால், அதுவும் வைத்தியர் ஒருவர் சொன்னால் நம்புவீர்களா? அமெரிக்காவை சேர்ந்த நரம்பியல் வைத்தியர் ஒருவர், சொர்க்கத்தை பார்த்து விட்டு வந்ததாக புத்தகமே எழுதி உள்ளார்.
சொர்க்கத்துக்கு ஆதாரம் என்ற தலைப்பிலான அந்த புத்தகம் வரும் 23 ஆம் திகதி வெளியாகிறது. அமெரிக்காவின் ஹார்வர்டு மருத்துவ பல்கலைக்கழத்தின் நரம்பியல் நிபுணர் வைத்தியர் எபன் அலெக்சாண்டர். இவர் கடந்த 2008ம் ஆண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்றார்.
அப்போது என்ன நடந்தது என்பது பற்றி வைத்தியர் சொல்வதை படியுங்கள்..மிக அரிய நோயால் பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்றேன். அப்போது ஏறக்குறைய இறந்து விட்டேன். உடலை விட்டு விண்ணில் உயர உயர சென்றேன். எங்கு பார்த்தாலும் புகை மண்டலம் போல மேகங்கள். மெல்லிய காற்று வீசியது. பறவைகள் கூட்டம் கூட்டமாய் பறந்தன. கருப்பும் நீலமும் கலந்த வானம். அதன் ஒளி வெள்ளத்தில் மிதந்தபடி விண்ணில் உயர உயர சென்றேன். மேக கூட்டங்களை தாண்டி மேலே சென்றேன். இதுவரை பார்த்திராத ஒரு கிரகம். அங்கு அழகிய தேவதைகள் இருந்தார்கள் உள்ளே சென்றேன்.
இலட்சக்கணக்கான பட்டாம்பூச்சிகள் பல வண்ணங்களில் எங்கும் சிறகடித்து பறந்தன. அங்கிருந்த பெண்கள் என்னை பார்த்து கதைத்தனர், அப்போது 3 தகவல்களை கூறினார்கள். நீங்கள் அன்புள்ளவர், பயப்படாதீர்கள், நீங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறினார்கள். சொர்க்கத்தை பற்றி நிறைய விஷயங்கள் பேசப்படுவதை நான் நம்புவதில்லை. அறிவியல் பூர்வமாக சொர்க்கம் என்பது நிரூபிக்கப்படவில்லை, ஆனால், நான் கோமாவில் இருந்த போது அந்த சொர்க்கத்தை பார்த்தது பெரும் ஆச்சரியமாக உள்ளது.
அதை புத்தகமாக எழுதும் போது சொர்க்கத்தில் நான் சந்தித்த அனுபவங்கள் நினைவுக்கு வந்தன. ஏன அச்த வைத்தியர் தெரிவித்துள்ளார். இந்த புத்தகம் 23ம் திகதி வெளிவரும் போது, மேலும், கதைகள் அதில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments :
Post a Comment