முகாமில் எந்தவொரு சிறுவர் போராளியும் இல்லையாம்! அனைவரும் விடுதலையாம்
எல்.ரீ.ரீ.ஈ யினரின் சகல சிறுவர் போராளிகளும் விடுதலை செய்யப்பட் டுள்ளதாகவும் மனிதாபிமான இறுதி கட்ட நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த சகல சிறுவர் போராளிகளும் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் 67 ஆவது பொதுச் சபை கூட்ட 3 ஆம் குழு அமர்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் மஹிந்த சமரசிங்க இதனை தெரிவித் துள்ளார்.
12 ஆயிரம் முன்னாள் போராளிகளில் 10 ஆயிரத்து 985 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்பட் டுள்ளதாகவும், புனர்வாழ்வு முகாமில் எந்தவொரு சிறுவர் போராளியும் இல்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார். சிறுவர் போராளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதில்லை எனும் கோட்பாட்டை இலங்கை அரசாங்கம் பின்பற்றி வருகிறது.
அதற்கிணங்க சுமார் 212 முன்னாள் போராளிகள் பல்கலைக் கழக கல்வியை தொடர்வதற்கும் அரசாங்கம் வழிவகுத்துள்ள தாகவும் இலங்கை மனித உரிமை விசேட பிரதிநிதி அமைச்சர் மஹிந்த சமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment