ஒரு லட்சம் பணத்தை பெற்று தாயையும் மகளையும் கொலை செய்த சந்தேகநபர்கள் நால்வர் கைது
கஹவத்தை பகுதியில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் தாய் மற்றும் மகள் ஆகிய இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர் புடைய நால்வர் கைது செய்யப் பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் நால்வரும் நேற்று கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ள பொலிஸார், தாயையும் மகளையும் இவர்களை கொலை செய்வதற்கு, ஒரு லட்சம் ரூபா பணம் நபர் ஒருவரிடம் இருந்து பெற்றுக் கொண்டதாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபடுபவர், தேங்காய் பறிப்பவர், முச்சக்கரவண்டித் திருத்துநர் மற்றும் கூலித்தொழிலாளி ஆகியோரே குறித்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் என தெரிவித்த பொலிஸார், கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment