விசேட மாநாடு ஒன்றில் கலந்து கொள்ள ஜனாதிபதி குவைத் பயணம்
ஆசிய ஒத்துழைப்புக்கான அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்கில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குவைத்திற்கு பயணமாகியுள்ளார். இன்று தொடக்கம் நாளை மறுதினம் வரை இம்மாநாடு குவைத்தில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய வலயநாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அவற்றுக்கான தீர்வு ஆகியன தொடர்பில் இவ் அரச தலைவர்கள் மாநாட்டில் கூடுதல் கவனம் செலுத்தப் படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அமைச்சர்ளுக்கான மாநாடு நேற்று இடம்பெற்றது இதில் இலங்கையை பிரிதிநிதித்துவப்படுத்தி வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கலந்துகொண்டமை குறிப்பிடத் தக்கது.
0 comments :
Post a Comment