குறை கூறுவதால் பயனில்லை! பேச்சுவார்த்தையை நடத்துவதன் மூலமே தீர்வு காணலாம்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இலங்கை அரசுடன் நேரடியாக பேச்சுவார்த்தயை நடத்துவதன் மூலமே, இனப் பிரச்சி னைக்கு தீர்வு காண முடியுமென அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
மாறாக, அவர்கள் இந்தியா சென்று குறை கூறுவதால் எவ்வித பயனும் இல்லையென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பிரச்சினைகளை அரசாங்கத்திடம் தெரிவிக்கும் பட்சத்தில், பேச்சுவார்த்தை நடத்த முடியும். எனினும் கூட்டமைப்பினர் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால், அரசாங்கத்தால் எதுவும் செய்ய முடியாதெனவும், அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
தற்போது புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர், இந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங், வெளிவிவகார அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா , தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் மற்றும், எதிர்கட்சித்தலைவி சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
கூட்டமைப்பினர் இந்தியாவில் சென்று குறைபாடுகளை கூறுவது, பயனற்றதென அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment