Thursday, October 25, 2012

ஏறாவூர் மாணவி இங்கிலாந்தில் தேசிய சாதனை.

ஏறாவூரில் பிறந்து தற்போது இங்கிலாந்தில் தனது பெற்றோருடன் வாழ்ந்து வரும், முன்னாள் அரச சேவை உத்தியோகத்தர் எஸ்.எச். அப்துல் ரசாக் அவர்களின் புதல்வி " வசீமா ரசாக்" , Interconnecting Cisco Networking Devices (ICND) எனும் பரீட்சையில் தோற்றி தன்னுடைய 15 ஆவது வயதில் "Network Engineer " ஆக சித்தியெய்தி பிரித்தானியாவில் சாதனை படைத்துள்ளார்.

இரட்டைத் தரமுயர்வொன்றின் மூலம் க.பொ.த. உயர்தர வகுப்பில் தனது பாடசாலைக் கல்வியைத் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், ICND எனும் கற்கை நெறியை பிரத்தியேகமாக மேற்கொண்டே அவர் இச்சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

உலகில்,அறிவியலின் உச்சத்தில் தாமே இருப்பதாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இங்கிலாந்து மாணவர்களிடம் போட்டி போட்டுக் கொண்டு தேசிய தரத்தில் எமது தாயகத்தின் இளம் மாணவி ஒருவர், தனது 15 வயதில் பொறியியலாளராக தரமுயந்திருப்பது பெருமைக்குரிய ஒரு விடயமாகும் . ஏறாவூர் மட்/ அஹமத் பரீத் வித்தியாலயத்தில் தனது பாலர் படிப்பைத் தொடர்ந்த இம்மாணவி 5 வது வயதில் தனது பெற்றோருடன் இங்கிலாந்தில் குடியேறி தற்போது அங்கேயே வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

1 comments :

Anonymous ,  October 26, 2012 at 12:33 PM  

I proud of her. As an Eravuran I congratulate her acheivement and best wishes to Razzak family

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com