இந்துக்கள் இன்று முதல் நவராத்திரி விரதத்தினை அனுஷ்டிக்கின்றனர்
இந்துக்கள் இன்று முதல் நவராத்திரி விரதத்தினை அனுஷ்டிக்கவுள்ளனர். சக்தி வழிபாட்டின் ஒரு வடிவமான நவராத்திரி விரதம் இன்று முதல் எதிர்வரும் 9 நாட்களு க்கு அனுஷ்டிக்கப்படவுள்ளது இந்நிலையில் 10 ம் நாள் விஜயதசமியுடன் நவராத்திரி விரதம் நிறைவுக்கு வரும்.
நவராத்திரி விரதத்தின் முதல் மூன்று நாட்களும் வீரத்தை வேண்டி துரக்கைக்கும், அடுத்த மூன்று நாட்களும் செல்வதை வேண்டி லக்ஷ்மிக்கும், இறுதி மூன்று நாட்களும் கல்வியை வேண்டி சரஸ்வதிக்கும் பூஜைகள் இடம்பெறும்
துர்க்கை, லக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவிகளும் மகிசன் எனும் கொடிய அரக்கனை அழிப்பதற்காக ஒன்பது நாட்கள் விரதமிருந்து, பத்தாம் நாள் விஜயதசமி அன்று மகிசன் எனும் கொடிய அரக்கனை வதம் செய்ததாக வேதநூல்கள் குறிப்பிடுகின்றன. அதற்கமையவே ஒவ்வொரு வருடத்திலும் புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment