Wednesday, October 31, 2012

பாலியல் தொழிலுக்காக இந்தோனேசிய சிறுமிகள் பேஸ் புக் மூலம் கடத்தல்

டெபோக்: பேஸ் புக் மூலம் இந்தோனேசிய சிறுமிகளுக்கு வலை விரித்து, அவர்களை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யும் கொடுமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தோனேசிய தலைநகர் ஜாகர்தா அருகில் உள்ளது டெபோக். இங்கு வசிக்கும் 14 வயது சிறுமி ஒருத்தியுடன் நட்பு வைத்து கொள்ள பேஸ் புக்கில் ஒருவர் அழைப்பு விடுத்திருந்தார். அந்த நபர் ஸ்மார்ட்டாக இருப்பார் என்று நினைத்து, அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு பேஸ் புக்கில் ஓகே சொல்லி விட்டார்.

அதன்பின் இருவரும் போன் நம்பர்களை பரிமாறி கொண்டனர். ஒரு நாள், டெபோக் பகுதியில் உள்ள ஷாப்பிங் மாலுக்கு வர சொன்னார் அந்த ஆசாமி. அதை நம்பி சிறுமியும் அங்கு சென்றாள். அங்கு 24 வயது நிரம்பிய அழகான வாலிபர் ஒருவர் இருந்தார்.

தன் பெயர் யோகி என்று கூறி சிறுமியிடம் அறிமுகம் செய்து கொண்டார். இருவரும் நீண்ட நேரம் பேசினர். மீண்டும் சந்திக்க ஒப்புக் கொண்டாள் சிறுமி. பின்னர் சர்ச் குழு பாடல் பயிற்சிக்கு செல்லும் வழியில் அந்த வாலிபரின் மினிவேனில் ஏறிக் கொண்டாள். ஆனால், சிறுமி குறிப்பிட்ட இடத்துக்கு வேன் செல்லவில்லை.

ஒரு மணி நேர பயணத்துக்கு பின் மேற்கு ஜாவா பகுதியில் உள்ள போகோர் என்ற இடத்துக்கு சென்றது. அங்கு ஒரு வீட்டில் அடைக்கப்பட்டாள் சிறுமி. அங்கு ஏற்கனவே 14 வயது முதல் 17 வயதுக்கு உட்பட சிறுமிகள் பலர் அடைக்கப்பட்டிருந்தனர்.

முதல் நாளில் சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து பலர் பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்து சித்ரவதை செய்துள்ளனர். ஒரு வாரம் கழித்து, Ôஉன்னை விலைக்கு விற்று விட்டோம். படாம் என்ற தீவுக்கு கப்பலில் அழைத்து செல்வார்கள்.

கத்தி ஆர்ப்பாட்டம் செய்தால் கொன்று விடுவோம் என்று சிறுமியை மிரட்டி உள்ளனர். படாம் என்ற இடம் சிறுமிகளை வைத்து பாலியல் பலாத்காரம் செய்யும் இடம். இங்கு சிங்கப்பூரில் இருந்து படகுகளில் வரும் ஆண்களுக்கு சிறுமிகளை இரையாக்குகின்றனர்.

பயங்கர சித்ரவதைகளுக்கு பிறகு எப்படியோ தப்பி வந்து அந்த சிறுமி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தாள். அதன்பின் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த சிறுமி மனநிலை பாதிக்கப்பட்டுள்ளாள்.

இதுகுறித்து தேசிய குழந்தைகள் பாதுகாப்பு கமிஷன் கூறுகையில், இந்தோனேசியாவில் காணாமல் போன 129 சிறுமிகளில், 27 பேர் பேஸ் புக் மூலம் அறிமுகமானவர்களால் கடத்தப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு சிறுமி படுகொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது என்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com