ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு மரணதண்டனை
கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்பு பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டதால் கண்டி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2008 ஓகஸ்ட் 29ம் திகதி அல்லது அதனை அண்மித்த காலத்தில் புசல்லாவ பகுதி தோட்டத்தில் 51 வயதுடைய நபர் ஒருவரை கொலை செய்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இதன்படி கொலை குற்றம் சுமத்தப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் மகன் ஆகிய மூவர் மீதும் சந்தேகத்திற்கிடமின்றி கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட் டுள்ளதால் அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment