ஜனாதிபதியின் சகோதரரை கொல்வதற்கு உளவாளியை அனுப்பியது யார்? ஜனாதிபதியேதான்
சீனாவில் வைத்து வட கொரிய ஜனாதிபதியின் சகோதரரை கொல்ல முயன்ற உளவாளி ஒருவர் சிக்கியுள் ளதாக தென் கொரியா அறிவித்து ள்ளது. வட கொரிய ஜனாதிபதியே, தமது சகோதரரை கொல்ல உளவா ளியை அனுப்பியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது
சமீபத்தில் பதவிக்கு வந்த புதிய வட கொரிய ஜனாதிபதியின் தந்தை கிம் ஜொங் உயிருடன் இருந்த காலத்தில் அவருக்கு ஆட்சிக்கு அடுத்தபடியான மூத்த மகன் கிம் ஜொங்-நாம் பதவிக்கு வருவதாக இருந்தது. ஆனால், அந்த மகன் திருட்டுத்தனமாக போலிக் கடவுச்சீட்டு ஒன்றில் ஜப்பான் சென்றபோது, ஜப்பானிய குடிவரவு அதிகாரிகளிடம் சிக்கிக் கொண்டார்.
இது வடகொரிய ஜனாதிபதிக்கு பொரிய அவமானத்தை ஏற்படுத்தவே, தனது மூத்த மகனுக்கு பதவி கிடையாது என ஒதுக்கி வைத்துவிட்டார். தற்போது ஜனாதிபதியாக உள்ள இளைய மகனை அடுத்த தலைவராக்க முடிவு செய்தார். இதையடுத்து, மூத்த மகன் வட கொரியாவை விட்டு வெளியேறி சீனாவில் வசித்து வந்தார்.
ஏதோ ஒருநாள் அவர் சீனாவில் இருந்து திரும்பி வந்து பதவிக்கு சண்டை போட்டால் சிக்கலாகி விடுமே என்ற முன்னெச்சரிக்கை காரணமாக, தமது மூத்த சகோதரரை கொல்ல ஆளை அனுப்பினார், இளைய சகோதரர்.
அனுப்பப்பட்ட நபர் சீனாவுக்கு சென்று சில வருடங்கள் வசித்திருக்கிறார். எனினும் இளைய சகோதரரால் அனுப்பப்பட்ட நபரால் கிம் ஜொங்-நாமை கொல்ல முடியவில்லை. இதற்குள் தந்தை இறந்து போக, இளைய சகோதரர் ஜனாதிபதியானார்.
அவரால் சீனாவுக்கு அனுப்பப்பட்ட நபர் பதட்டமடைந்தார். காரணம், இவர் கொடுத்த உத்தரவுப்படி சகோதரர் கொல்லப்படவில்லை என்பதால், புதிய ஜனாதிபதி பழிவாங்கலாம். இந்த பயம் காரணமாக அந்த நபர், சீனாவில் இருந்து கிளம்பி வட கொரியாவின் எதிரி நாடான தென் கொரியாவுக்குள் அகதியாக வந்துவிட்டார்!
இவ்வாறு இளைய சகோதரரால் அனுப்பப்பட்ட நபரைத்தான் பிடித்திருக்கிறார்கள், தென் கொரிய உளவுத்துறையினர். இந்த விவகாரத்தை இவரது வாயால் முழுமையாக சொல்ல வைத்து, அதன் மூலம், வடகொரிய ஜனாதிபதியை அவமான ப்படுத்த தென்கொரியா விரும்பும் என எதிர்பார்க்கலாம்!
0 comments :
Post a Comment