அமெரிக்கா மீது சைபர் தாக்குதல் அபாயம் உள்ளது - அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர்
அமெரிக்கா மீது சைபர் தாக்குதல்களை மேற்கொள்ள சதித்திட்டங்கள் இடம் பெற்று வருவதாக அந்நாட்டு பாதுகாப்பு செயலாளர் லியோன் பெனீட்டா தெரி வித்துள்ளார். இதனால் இத் தாக்குதல் களிலிருந்து நாட்டை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
சில வெளிநாட்டு சக்திகள் அமெரிக்காவின் பொருளாதார கட்டுப்பாட்டு முறையை கையாள்வதற்கு முனைகின்றன எனவும், இதனால் அவர்கள் சைபர் தாக்குதல்களை கையாள்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு விநியோக செயற்பாட்டின் இரகசியத்தை கண்டறியும் நோக்கில் கணனியின் மூலம் தகவல்கள் திருடப்படுகின்றன. இதனால் அமெரிக்காவின் இராஜாங்க தகவல்கள் கசிவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இத்தகைய இணையத் தாக்குதல்களினால் நாட்டின் முழு செயற்பாட்டையும் முடக்கிவிடும் அபாயம் காணப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக சைபர் தாக்குதல்களிலிருந்து அமெரிக் காவை பாதுகாப்பதற்கு தேவையான சலக நடவடிக்கை களையும் மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லியோன் பெனீட்டா தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment