குறைந்த செலவிலான சுற்றுலாப் பயணப் பட்டியலில் இலங்கை முதலிடம் - பிரிட்டிஷ்
குறைந்த செலவில் சுற்றுலாப் பயண ங்களை மேற்கொள்ளும் நாடுகள் வரிசையில், இலங்கை முதலிடத்தில் இருப்பதாக, பிரிட்டிஷ் கணிப்பீ டொன்று தெரிவிக்கிறது. பிரிட்டனின் போஸ்ட் ஓபீஸ் சுற்றுலா நிறுவனம் மேற்கொண்ட கணிப்பீட்டின் படி, உலகில் குறைந்த செலவினத்தில் சுற்றுலாவை மேற்கொள்ளக்கூடிய நாடாக, இலங்கை குறிப்பிடப்பட்டுள்ளது.
அதி உயர் நிலை ,சிறந்த உணவு வேளையொன்றுக்கான செலவினை கருத்திற்கொண்டு, இந்த கணிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனடிப்படையில், இலங்கையில் சுற்றுலாப் பொதியொன்றுக்கு 46 பிரிட்டிஷ் பவுன்கள் செலவாகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறைந்த செலவுகளை உடைய நாடுகள் வரிசையில் இரண்டாவது இடத்தில் வியட்நாம் திகழ்கிறது. அங்கு 53 பிரிட்டிஷ் பவுன்கள் செலவாகிறது. மூன்றாவது இடத்தில் உள்ள பாலி தீவுகளில் 53 பவுன்கள் செலவாகிறது. மெக்சிகோ 4வது இடத்திலும், தாய்லாந்து 5வது இடத்திலும் இருப்பதாக, கணிப்பீட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இக்கணிப்பீடுகள் தொடர்பாக, பிரிட்டனின் மிரர் சஞ்சிசை ஆய்வாளர்களை மேற்கோள் காட்டி, வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் மேலதிக சேவைளுக்கான செலவினங்கள், மிக குறைந்த மட்டத்தில் காணப்படுவதாக, தெரிவிக்கப்படுகிறது.
0 comments :
Post a Comment