இலங்கையிலும் புயல் பீதி
இலங்கையின் வடக்கு கடற்கரைப் பகுதியில் புயல் தாக்கும் அபாயம் இருப்பதால் அப்பகுதியிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். இலங்கையின் வட கடற்கரையில் வலுவான புயல் சின்னம் மையம் கொண்டிருப்பதாகவும், எனவே அப்பகுதியில் புயல் தாக்கலாம் எனவும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.
இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து கடற்கரைப் பகுதிகளில் வாழும் மக்களை அரசு வெளியேற்றி வருகிறது.
இதுபற்றி பேசிய அந்நாட்டு பேரிடர் மேலாண்மை மைய துணை இயக்குனர் லால் சரத் குமாரா, ‘குச்சவெல்லியில் இருந்து ஜப்னாவுக்கு இடைப்பட்ட பகுதிகளில் கடலுக்கு 500 மீட்டர் தொலைவுக்குள் வசிக்கும் மக்களை வெளியேற்ற நாங்கள் முடிவெடுத்தோம்’ என்றார்.
மேலும், இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்ததாகவும், முல்லைத்தீவில் வசிக்கும் 4,000 மக்கள் மழையால் பாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தென் மாவட்டமான கல்லியில் அதிகபட்சமாக 140 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பெய்ததால், சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து முழுவதுமாக பாதிக்கப்பட்டது.
0 comments :
Post a Comment