இன்னொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுத்துள்ளார் மகிந்த
உள்ளுராட்சி தேர்தல் திருத்த சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப் பித்து விருப்பு வாக்கு முறையை ஒழிக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எடுத்த முடிவு, வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்தது எனவும், இதன் மூலம் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் புரிந்துள்ள வரலாற்று சாதனையை புத்திஜீவிகளும் மதத்தலைவர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
விருப்பு வாக்குமறை நீக்கப்பட்டதன் மூலம் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக செலவிடப்படும் நிதி பெருமளவு குறைவடையும் எனவும், வசதி படைத்தவர்கள் மாத்திரமன்றி வறியவர்களும் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது எனவும், இச்செயல் ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதற்கான சிறந்த செயற்பாடாகுமென புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர்.
உள்ளுராட்சி தேர்தல் முறையில் விருப்பு வாக்குமுறை நீக்கப்பட்டுள்ளதால் ஒரே கட்சிக்குள் ஏற்படும் போட்டித் தன்மையையும் பேதங்களையும் தடுக்கமுடியும் எனவும், விகிதாசார தேர்தல் முறை முழுமையாக ரத்து செய்யப்படாமல் சிறுபான்மையினரின் நலன்கருதி கலப்பு தேர்தல் முறையாக உருவாக்கப்பட்டுள்ளமை வரவேற்கப்ட வேண்டிய விடயமென மதத்தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் விருப்பு வாக்குமுறை மூலம் வசதி படைத்தவர்கள் வெற்றிபெறும் துர்ப்பாக்கிய நிலை தற்போது மாற்றப் பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment