இலங்கையருக்கு இந்தியக் குடியுரமை வழங்குக – ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்.
வங்காள தேசத்தவர் மற்றும் நேபாள நாட்டவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. எனவே இலங்கை தமிழர்கள் 25-30 ஆண்டுகளாக தமிழ் நாட்டு அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என ஸ்ரீ ரவிசங்கர் தெரிவிக்கின்றார்.
அத்துடன், அவர்களை அகதி முகாம்களில் வைத்துக் கொண்டு தமிழ்நாடு பெருமைப்பட முடியாது என்று, வாழும் கலை அமைப்பின் நிறுவன ஆன்மீகக் குரு ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.
கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றிக் கேட்டபோது, தான் இது விடயத்தில் அப்துல் கலாமின் கருத்தைக் கொண்டிருக்கின்றோன் எனவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment