சில புலம் பெயர் தமிழர்கள் குருடர்களாம் - சமரசிங்க
நாட்டில் எவ்வளவு அபிவிருத்திகள் சாதக மாற்றங்கள் ஏற்பட்டாலும் அதனை சில தமிழ் புலம்பெயர் மக்கள் உட்பட சில தரப்பினர் தமது சுயநலனுக்காக ஏற்க மறுக்கின்றார்கள் எனவும், இவ்வாறான சில புலம் பெயர் தமிழர்கள் குருடர்களை போன்றவர்கள் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
சிங்களப் பத்திரிகையென்றுக்கு அளித்த பேட்டியிலேயே அமைச்சர் அதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் அங்கு தெரிவிக்கையில், சர்வதேசத்திற்கு நாட்டின் தற்போதைய உண்மை நிலைமையை தெரிவிக்க வேண்டும் எனவும், அரசாங்கத்திற்கு எதிராக செயற்படும் இணையத்தளங்கள் மூலம் தெரிவிக்கப்படும் தகவல்களைப் பெற்றுக் கொண்டு, அவ்இணைய தளங்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாது எனவும், இலங்கைக்கு நேரடியாக விஜயம் செய்யவதன் மூலம் இங்குள்ள மக்களின் உண்மை நிலைமையை தெரிந்து கொள்ள முடியும் என, சர்வதேச சமூகத்திற்கு நாம் தெரிவிக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடந்த மாகாண சபைத் தேர்தல்களின் முடிவுகளின் மூலம் இலங்கை மக்கள் தமது விருப்பத்தை உலகிற்கு தெரிவித்துள்ளனர் எனவும், மனித உரிமைப் பேரவையில் மேற்குலக நாடுகளுக்குச் சார்பானவர்களே அதிகளவில் அங்கம் வகிக்கின்றனர் எனவும், இதனால் பக்கச்சார்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படக் கூடிய அபாயம் காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
1 comments :
மிக சரியாக சொல்லியிருகின்றார் , இந்த புலன்(ம்) பெயர்த்ததுகள் , புலிக்கு தமிழ் ஈழம் வாங்கித் தா என்று கப்பம் கட்டி விட்டு , இன்று ஐ நா சபையிடமும் சர்வ தேசத்திடமும் தமிழ் ஈழ பிச்சை கேட்கின்றனர் , இந்த குருடர்கள் " ஆத்தில் போட்டு விட்டு குளத்தில் தேடுகின்றனர் " , புலி பினாமிகளிடம் திருப்பிக் கேட்க துப்பில்லாத கையாளாக கூட்டம்.
Post a Comment