திருவனந்தபுரம் விமானநிலையத்தில் மத்திய மந்திரி மனைவியிடம் சில்மிஷம் செய்த வாலிபர்
திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசி தரூர். மத்திய அரசில் வெளியுறவுத்துறை இணை மந்திரியாக இருந்தார். இவர் மீது பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியதை அடுத்து இவர் பதவி விலகும் நிலை ஏற்பட்டது. தற்போது மந்திரி சபை மாற்றியமைக்கபட்டதில் சசி தரூருக்கு மீண்டும் மத்திய மந்திரி பதவி கிடைத்துள்ளது.
அவர் மனித வள மேம்பாட்டு துறை இணை மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். பதவியேற்ற சசிதரூர் நேற்று மனைவி சுனந்தா புஷ்கருடன் திருவனந்தபுரம் வந்தார்.
அவருக்கு விமான நிலையத்தில் காங்கிரசார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால் விமான நிலையத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி கூட்டத்தில் இருந்த ஒருவர் சசி தரூர் மனைவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுனந்தா தன்னிடம் சில்மிஷம் செய்த வாலிபரை பிடித்து கொண்டார். அதோடு அவரது கன்னத்தில் பளார் என அறை விட்டார்.
இதை சற்றும் எதிர்பாராத அந்த வாலிபர் கூட்டத்தில் இருந்து நழுவி செல்ல முயன்றார். இதற்குள் சம்பவம் பற்றி அறிந்து கொண்ட காங்கிரசார் அந்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது
0 comments :
Post a Comment