தனது தவறை ஒத்துக்கொண்டது சண்டே லீடர்! மன்னிப்பு கேட்டது கோத்தாபயவிடம்!
சண்டே லீடர் பத்திரிகையில் பாது காப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தொடர்பில் தவறான செய்திகள் வெளியிட்டது தவறாகும் என சண்டே லீடர் தெரிவித்துள்ளது. வெளியிடக்கூடாத செய்திகள் வெளியிடப்பட்டமை தமது பிழையென பத்திரிகை குறிப்பிட்டுள்ளதுடன் சண்டே லீடர் பத்திரிகைக்கு எதிராக பாதுகாப்புச் செயலாளர் பத்திரிகை சபையில் முறைப்பாடு செய்திருந்தார்.
அது தொடர்பாக விசாரணை நடாத்தப்பட்ட போதே தாம் தவறிழைத்துள்ளதை சண்டே லீடர் பத்திரிகையின் உயர திகாரிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர். பாதுகாப்புச் செயலாளர் தொடர்பில் வெளியிடப்பட்ட செய்திக்கு மன்னிப்பு கோரவும் தயார் எனஅவர்கள் குறிப்பிட்டள்ளனர்.
இதற்கமைய இரு தரப்பினரும் இணக்கப்பாட்டுக்கு வந்த தையடுத்து பிரச்சினை தீர்க்கப்பட்டதாக பாதுகாப்புச் செயலாளர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
சண்டே லீடர் பத்திரிகை பாதுகாப்புச் செயலாளர் தொடர்பில் தவறான செய்தியை வெளியிட்டதை ஒப்புக்கொண்டது. இதனால் பத்திரிகையின் ஊடாக பாதுகாப்புச் செயலாளரிடம் பொதுமன்னிப்பு கோருவதோடு, செய்தியினால் ஏற்ப்பட்ட களங்கத்திற்கு இணையாக பாதுகாப்புச் செயலாளர் தொடர்பான செய்திகளுக்கு முன்னரிமை கொடுக்கவும் இணங்கியுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment