மோதிவிட்டு ஓடிய சப்-இன்ஸ்பெக்டர் ரிமாண்டில்
கடந்த 3 ம் திகதி தலாவை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த உதவிப் பரி சோதகரான. ரட்னாயக்கா தனது காரில் போய்க்கொண்டிருக்கும் போது அனுரா தபுரம் பொதனாகமை சந்தியில் ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு ஓடிவிட்டார்.
ஆனால், இதனைக் கவனித்த வழிப்போக்கர் ஒருவர் காரின் அடையாளங்களை பொலிசுக்குக் கூறியதால் குறிப்பிட்ட பொலிஸ் உதவிப் பரிசோதகர் இப்பொழுது பிடிபட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
காரில் மோதியது தனக்குத் தெரியாது என்று அவர் கூறினாலும், அவரது செயல் பொறுப்பு வாய்ந்த பொலிஸ்காரர் ஒருவர் செய்யும் செயலாக இல்லாதபடியால் அவரது வாதம் எடுபடவில்லை. அடிபட்டவர் மருத்துவமனையில் சுகிச்சை பெற்று வருகின்றார்.
0 comments :
Post a Comment