அமெரிக்காவின் 8 மாகாணங்களை மிரட்டும் தொற்று நோய்- 219 பேர் பலி
அமெரிக்காவின் 8 மாகாணங்களில் பரவி வரும் தொற்று நோயால் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் நீர்வழி செடிகளினால் ஏற்படும் தொற்று கிருமி மனித உயிர்களை காவு வாங்கி வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை 219 பேர் இறந்துவிட்டனர். இந்தத் தொற்று நோயால் 4,725 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் டெக்சாஸ், கலிபோர்னியா, லூசியானா, இல்லியான்ஸ் உள்ளிட்ட 8 மாகாணங்களில் இந்த தொற்று நோய் பரவி வருகிறது.
மிக அதிகமாக டெக்சாஸ் மாகாணத்தில் 1,683 பேர் பாதிப்புக்குள்ளாகி 77 பேர் பலியாகி உள்ளனர். குறிப்பாக டால்ஸ் போர்ட் என்ற பகுதியில் மட்டும் 36 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதேபோல் கொசுக்கடியால் ஏற்பட்ட நோய்க்கு 36 பேர் பலியாகி இருக்கின்றனராம்!
0 comments :
Post a Comment