அணு உலையால் இலங்கைக்கு பாதிப்பா? விரைகின்றது 6 பேர் கொண்ட குழு இந்தியாவுக்கு
கூடங்குளம் அணு உலையினால் இலங்கைக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது தொடர்பான பேச்சுவார்த் தையை மேற்கொள்வதற்காக இலங் கையிலிருந்து 6 பேர் கொண்ட குழு வொன்று இந்தியா செல்லவுள்ள துடன், கூடங்குளம் தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடுவது தொடர்பிலும் இபபேச்சுவார்த்தையின் போது ஆராயப்படவுள்ளதாக, மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய இலங்கை மற்றும் இந்திய அணுசக்தி அதிகாரிகளுக்கிடையில் நடைபெறும் குறித்த முதலாவது பேச்சுவார்த்தை எதிர்வரும் 12 ஆம் திகதி இந்தியாவில் நடைபெறவுள்ளதாகவும், குழுவில் அணுசக்தி அதிகார சபையின் தலைவர் ரன்ஜித் விஜேவர்தன, உள்ளிட்ட பல உயர்மட்ட அதிகாரிகள் உள்ளடக்கப்பட்டுள்ளனர் எனவும்,தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் கூடங்குளம் அணு உலையினால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது எமது கடமையென தெரிவித்த அமைச்சர், சர்வதேச அணு சக்தி உடன்பாட்டின் அடிப்படையில் ஏனைய நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்தியா செயற்பட வேண்டுமென மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment