பிரித்தானிய கடற்படையினர் மீது கொலை குற்றச்சாட்டு! 6 கடற்படை வீரர்கள் கைது
பிரித்தானிய கடற்படையினர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள் ளது. பிரித்தானிய கடற்படையை சேர்ந்த 6 வீரர்களே அவ்வாறு கொலை குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளனர். கொலை குற்றச்சாட்டுக்கு உள்ளான குறித்த கடற்படை வீரர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற கொலையுடன் குறித்த கடற்படையினருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் படையினரை தவிர கொலையுடன் எந்த வொரு சிவிலியனுக்கும் தொடர்பில்லையென பிரித்தானியா தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் அந்நாட்டு இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொலைக் குற்றச்சாட்டின் அடிப்படையில் பிரித்தானிய கடற்படையினர் கைதுசெய்யப்பட்டுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். நாட்டின் நீதி கட்டமைப்புகளுக்கமைய விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் கொலை தொடர்பான விசாரணைகள் சுதந்திரமாக முன்னெடுக்கப்படுவதாகவும் அதில் எந்தவொரு பராபட்சமும் ஏற்படாதெனவும் பிரித்தானிய அரசாங்கம் உறுதியளித் துள்ளது.
0 comments :
Post a Comment