ஐ.நா. சபையின் 67வது அமர்வில் பலஸ்தீனத்திற்காக குரல் கொடுத்துள்ளார் பாலித!
பலஸ்தீனத்தை புதிய சுதந்திர தேசமாக அங்கீகரிக்க வேண்டுமென உலக நாடுகளிடம் இலங்கை கோரி;க்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 67வது பொது அமர்வில் நேற்றைய தினம் உரையாற்றிய ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதி பாலித கொஹண குறித்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
காலம் கடத்தாது, பாலஸ்தீனத்தை உலக நாடுகள் புதிய சுதந்திர நாடாக அங்கீகரிக்க வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார். அதன்மூலம் பலஸ்தீனத்தின் அவலங்களுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் மூலம் முற்றுப்புள்ளி வைக்க முடியுமெனவும் பாலித கொஹண தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்கான இலங்கை தொடர்ந்தும் குரல் கொடுக்குமென இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதி பாலித கொஹண மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment