இலங்கையின் வீதி அபிவிருத்திக்கு சவுதி அரசு 60மில்லியன் அ.டொ நிதி உதவி
இலங்கையில் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டதை மேற்கொள்வதற்காக சவுதி அரேபிய அரசாங்கம் இலங்கைக்கு சுமார் 60 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.
இலங்கை வந்துள்ள சவுதி அரேபிய நிதி அமைச்சரும் அபிவிருத்திக்கான சவுதி நிதியத்தின் பணிப்பாளர் சபையின் தலைவருமான போராசிரியர் இப்றாகிம் அல் அசாப் ஜனாதிபதி .மஹிந்த ராஜபக்ஷவை நேற்று அலரி மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையில் இந்த உதவி தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பதந்தம் கைச்சாத்திடப்பட்டது
சவுதி அரேபிய நிதி அமைச்சரும் அபிவிருத்திக்கான சவுதி நிதியத்தின் பணிப்பாளர் சபையின் தலைவருமான போராசிரியர் இப்றாகிம் அல் அசாப் மற்றும் சிரேஷ்ட அமைச்சர் சரத் அமுனுகம ஆகியோர் இந்த புரிpந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
0 comments :
Post a Comment