மேலும் 60 இலங்கையர்களை ஜக்கிய ராஜ்யம் நாடு கடத்துகின்றது.
வலிதான பயண ஆவணங்கள் இன்றி, மாணவர் வீசா மற்றும் தொழில் உரிமம் போன்ற பல போலியான ஆவணங்களை வைத்துக் கொண்டு பல ஆண்டுகளாக பிரித்தானியாவில் வசித்து வரும் புகலிட கோரிக்கையாளர்களான 60 இலங்கை யர்களை 23 ம் திகதி ஒரு விசேட வாடகை விமானம் மூலம் நாடு கடத்தப்பட விருப்பதாக பிரித்தானிய குடிவரவு அலுவலர்கள் தெரிவிக்கின்றார்கள்.
எனினும், பல தமிழ் அமைப்புகளும் மனிதவுரிமை அமைப்புகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. எனினும் பிரித்தானியா அவர்களை நாடுகடத்துவதற்கான ஏற்பாடு களை செய்து முடித்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment