மதவாத பிரிவினரின் மற்றொரு தீர்ப்பு! ஆணுடன் கதைத்த சிறுமிக்கு 60 கசையடி தண்டனை
பொது இடத்தில் ஆணுடன் பேசிய 15 வயது சிறுமியொருவருக்கு 60 கசையடி தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் மாலே தீவில் இடம்பெற்று ள்ளது. மாலே தீவில் உள்ள டிம்புக்டு பகுதியில் உள்ள ஒரு பிரிவினர், பொதுமக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளதுடன், அவர்களே நகரில் பொலிஸ் போல செயல்பட்டு வருகின்றனர் எனவும், அவர்களின் கட்டுப்பாடுகளை மீறி நடப்பவர்களுக்கு அப்பிரி வினரே பொது இடத்தில் தண்டனையும் வழங்குகின்றனர் எனவும், தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் 15 வயது சிறுமி தெருவில் ஆண் ஒருவருடன் கதைத்துக் கொண்டிருந்ததாக, மதவாத பிரிவினர் குற்றம் சாட்டினர். இதையடுத்து குறித்த சிறுமிக்கு பொது இடத்தில் 60 கசையடி வழங்க உத்தரவிட்டனர்.
அதன்படி, பொது இடத்தில் காலை 11 மணிக்கு சிறுமிக்கு 60 கசையடி வழங்கப்பட்டது. இதுகுறித்து டிம்புக்டு நகரில் வசிக்கும் பெண் ஒருவர் கூறுகையில், ஏற்கனவே அந்த சிறுமி 5 முறை பொது இடத்தில் ஆண்களுடன் பேசியதாக மதவாத பிரிவினர் குற்றம் சாட்டி எச்சரித்து இருந்தனர். அதையும் மீறி ஆணுடன் பேசினாள். அதனால் தண்டனை வழங்கப்பட்டது. வழக்கமாக இதுபோல் தண்டனை வழங்கும் போது பொதுமக்கள் ஏராளமானோர் அதை வேடிக்கை பார்ப்பார்கள். சிறுமிக்கு கசையடி கொடுத்த போது அவ்வளவு கூட்டம் இல்லை என தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment