தாக்குதல் நடத்திய சந்தேக நபர் தொடர்பில் தகவல் தந்தால் 5 இலட்சம் ரூபாவை பரிசு
நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுல திலகரத்ன மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர் தொடர்பில் தகவல் வழங்குவோரு க்கு பணப்பரிசு வழங்கப்படுமென பொலிஸார் அறிவித்துள்ளனர். சந்தேக நபர் தொடர்பில் சரியான தகவலை வழங்குவோருக்கு 5 இலட்சம் ரூபாவை பரிசாக வழங்க பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன் தீர்மானித்துள்ளார்.
தாக்குதல் நடத்தியவர் என சந்தேகிக்கப்படும் நபரின் உருவம் கணனியின் துணைகொண்டு வரையப்பட்டு ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளது. மஞ்சுல திலகரத்ன மீது இனந்தெரியாத நால்வர் தாக்குதல் நடத்தியதாகவும் அவரிடமிருந்த கையடக்க தொலைபேசி மற்றும் 41 ஆயிரம் பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளது.
குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர். இந்நிலையில் சந்தேக நபர்கள் தொடர்பாக விபரம் தெரிந்தோர் 0112 441 147, 0112 431 428 0112 662 323 , 0112 662 311 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத்தருமாறு பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment