ஐ.நா.பாதுகாப்புச் சபையில் 5 நாடுகள் புதிதாக இணைந்து கொண்டன
ஐ.நா.பாதுகாப்புச் சபையில் 5 நாடுகளுக்கு புதிதாக அங்கத்துவம் வழங்கப்பட்டுள்ளது. ருவாண்டா, ஆர்ஜன்டினா, அவுஸ்திரேலியா, தென்கொரியா மற்றும் லக்சம்பேர்க் ஆகிய நாடுகளே இவ்வாறு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் நிரந்தரம் அல்லாத நாடுகளாக சேர்க்கப்பட்டுள்ளன.
இன்நாடுகளை இங்கத்துவ நாடுகளாக இணைத்துக் கொள்வதற்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் 193 நாடுகளில் குறைந்தது 129 நாடுகளின் வாக்குகளைப் பெற்ற நாடுகளே தெரிவு செய்யப்பட்டன.
இதற்கமைய ருவாண்டா 148 வாக்குகளைப் பெற்றுக் கொண்டது. அவுஸ்திரேலியாவுக்கு 140 வாக்குகளும், லக்சம்பேர்க்கிற்கு 131 வாக்குகளும், தென்கொரியாவிற்கு 149 வாக்குகளும், அதிகபட்சமாக ஆர்ஜன்டினாவிற்கு 182 வாக்கு களும் கிடைத்தன. ஆசிய பசுபிக் நாடான தென்கொரியா குறித்த பகுதியில் பூட்டான் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளை தோற்கடித்து பாதுகாப்புச் சபைக்கு தெரிவாகியுள்ளது.
மேற்கு ஐரோப்பிய நாடான லக்சம்பபேர்க் பின்லாந்தை தோற்கடித்து தெரிவாகியுள்ளது. 15 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையில் 10 நாடுகள் நிரந்தர அங்கத்தும் அற்ற நாடுகளாகும். அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளே நிரந்தர அங்கத்தும்பெற்ற வீடோ அதிகாரமுள்ள நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment