Monday, October 15, 2012

ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் - கண்டியில் சம்பவம்

தாய் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்த சம்பவமொன்று கண்டி ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை குறித்த பிரசவம் இடம்பெற்றதாக கண்டி ஆதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

5 பிள்ளைகளில் 3 ஆண் குழந்தைகளும் 2 பெண் குழந்தைகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 29 வயதான தாய் ஒருவரே ஒரே பிரசவத்தில் குறித்த 5 குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார்.

இந்நிலையில் தாயும் பிள்ளைகளும் நலமாக இருப்பதாக கண்டி ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com