Thursday, October 11, 2012

55 இலங்கையர்கள் தமிழகத்தில் கைது! புறோக்கர் தன் மனைவியுடன் தப்பியோட்டம்!

அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் அனுப்புவதாக கூறி அழைத்துச் சென்ற 55 இலங்கையர்களை தமிழகத்தின் சிந்தலக்கரை காளியம்மன் கோயிலில் வைத்து செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சென்னை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த இலங்கையைச் சேர்ந்த சுமார் நூறு பேர் படகு மூலம் விளாத்திகுளம் கடல் பகுதியில் இருந்து அஸ்திரேலியா செல்ல இருப்பதாகவும், இதற்காக அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியில் தங்கி இருப்பதாகவும், தமிழக உளவுத்துறையினருக்கு தகவல் கிடைத்ததையடுத்தே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு தினங்களுக்கு முன்பு சிந்தலக்கரை வந்த இவர்கள், காளியம்மன் கோயிலுக்கு சாமி கும்பிட வந்தவர்கள் போல அங்கு தங்கியுள்ளனர். அங்கிருந்து கலைக்குட்டம் செல்வதற்கு எட்டயபுரத்தில் வேன் வாடகை பேசிய போது, இவர்கள் மீது சந்தேகமடைந்த வேன் டிரைவர்கள் உளவுத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் அங்கு சென்ற போது, பொலிஸார் வருவதை அறிந்த 40 பேர் தப்பி ஓடிவிட்டனர் எனவும், எஞ்சியிருந்த 20க்கும் அதிகமான குடும்பங்களை சேர்ந்த 55 பேரை பிடித்து நடத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

விசாரணையின் போது, இவர்கள் அனைவரையும் திருச்சி சீனிவாச நகரில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த புரோக்கர் ரமணன் என்பர் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைப்பதாக கூறி, ஒருவருக்கு 1.5 லட்சம் முதல் 3 லட்சம் ரூபா வரை பணம் பெற்றுக்கொண்டு அங்கு கொண்டுவந்தது தெரியவந்தது. விளாத்திகுளம் அருகே உள்ள கலைக்குட்டம் கடற்கரை கிராமம் சென்று அங்கிருந்து படகு மூலம் கேரளா வழியாக அவுஸ்திரேலியா செல்வதுதான் திட்டமாக இருந்தது என தெரிவித்துள்ளனர்

இவர்கள் பொலிஸில் சிக்கியதை அறிந்த புரோக்கர் ரமணன், மனைவி மற்றும் ஒரு குழந்தையுடன் தப்பி சென்று விட்டார். தப்பியோடும் அவசரத்தில் தனது மற்றொரு குழந்தையை விட்டு சென்றுள்ளார் என பொலிஸார் தெரிவித் துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com