Saturday, October 27, 2012

வரலாற்றுச் சிறப்புமிக்க ஒல்லாந்தர் கோட்டையை புனரமைக்க 52000 அமெரிக்க டொலர்கள் நிதியுதவி


2011ம் ஆண்டிற்கான கலாசார பேணுகைக்கான தூதுவர் நிதியத்தின் மூலமாக வழங்கப்பட்ட 52000 அமெரிக்க டொலர்கள் நிதியுதவியின் கீழ் பாதுகாக்க நடவடிக்கையெடுக்கப்படும் என வரலாற்றுச்சிறப்புமிக்க ஒல்லாந்தர் கோட்டையை பார்வையிட்ட அமெரிக்க தூதுவர் மிசேல் ஜே. சிஸன் தெரிவித்துள்ளார்.



பிரதேசத்தின் இன்றியமையாத் தேவையாக இருந்த கலாசார பாதுகாப்புப் பணியானது இலங்கையில் 26 ஆண்டுகால யுத்தத்தாலும் 2004ம் ஆண்டு சுனாமியின் பாதிப்புக்களாலும் நீண்டகாலமாக தடைப்பட்டிருந்தது.

ஆனாலும் கலாசார பேணுகைக்கான தூதுவர் நிதியத்தின் நன்கொடையின் துணையுடன் உள்ளுர் பங்காளர்கள் கலாசாரத்தை பராமரிப்பு மூலமாக பாரிய பொருளாதார அபிவிருத்தியினை ஊக்குவிப்பதற்கு துணைபுரியும் அதேவேளை இந்த தேசிய சொத்தை மீட்டெடுக்கும் பணிகளை ஆரம்பித்தனர்.

இந்த திட்டமானது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்குமாகாணத்தில் அபிவிருத்தியை முன்னெடுப்பதில் முக்கிய அம்சமாக மட்டக்களப்பிலுள்ள புராதன ஒல்லாந்தர் கோட்டையைப் பாதுகாத்து அதனை மீள்பயன்பாட்டிற்கு உட்படுத்துவது தொடர்பாக ஆராய்ந்தது.

சுற்றுலாத்துறையில் புதிய வாழ்வாதாரத்தை உருவாக்குவதன் மூலமாக நாட்டில் அடையாளச்சின்னங்களை அபிவிருத்திசெய்வதற்கான முன்மாதிரியாக மட்டக்களப்பு கோட்டையை மாற்றுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகவுள்ளது.

உள்ளுர் சமூகத்தவர்களுக்கும் அங்கு விஜயம் செய்பவர்களுக்கும் பிரதேசத்தின் கலாசார பல்வகைத்தன்மைக்கு ஓர் உதாரணமாக விளங்கி புத்தூக்கத்தை ஏற்படுத்துவதாக அமையும்.

கலாசார பேணுகைக்கான தூதுவர் நிதியத்தினால் வழங்கப்பட்ட நிதியின் மூலமாக என்வயர்மென்ற் பிளானிங் சேர்விசஸ் ( பிரைவட்) லிமிடட் மற்றும் நகர திட்டமிடல் நிறுவனம் ஆகியன எதிர்காலத்தலைமுறையினருக்காக ஒல்லாந்தர் கோட்டையைப் பாதுகாக்கவும் அபிவிருத்திசெய்யவதற்கும அவசியமான கணிப்பீடுகளை மேற்கொள்ளவும்; அடையாளச்சின்னத்தை ஆவணப்படுத்தக்கூடியதாக உள்ளது


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com