500 பொலிஸார் இல்லையாம் 59 பேர் மட்டுமாம்! ஊடகங்கள் எங்கிருந்து தகவல்களை பெறுகின்றன?
வருடம் தோறும் பொலிஸாருக்கு எதிராக 500 க்கும் மேற்பட்ட இலஞ்ச ஊழல் வழக்குகள் தாக்கல் செய்யப் படுவதாக வெளியான தகவலை பொலிஸ் தலைமையகம் நிராகரித்து ள்ளது. கடந்த 4 வருடங்களில் 59 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக மாத்திரமே இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு வழக்கு சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பொலிஸாருக்கு எதிராக அதிகளவில் பாலியல் சார்ந்த இலஞ்ச குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்ததாக செய்திகள் வெளியிடப்பட்டன அதை மறுத்துள்ள பொலிஸ் தலைமையகம், இரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக மாத்திரமே பாலியல் ரீதியான இலஞ்ச குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருப்பதாக தலைமையகம் குறிப்பிட்டு ள்ளது.
இந்நிலையில் ஊடகங்கள் எவ்வாறான தரவுகளை வைத்து செய்திகளை வெளியிட்டது என்பது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கேள்வி எழுப்பியுள்ளார். தரவுகள் எங்கிருந்து கிடைத்தன என்பது தொடர்பில் வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கு காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment