வாழைச்சேனையில் காணாமல் போன 5 பிள்ளை களின் தாய் புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு
மட். வாழைச்சேனையில் காணாமல் போயிருந்த 5 பிள்ளைகளின் தாயான, கிண்ணையடியை சேர்ந்த அ. சின்னப் பிள்ளை என்பவர் புதைக்கப்பட்ட நிலையில் இன்று சடலமாக மீட்கப் பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
38 வயதுடைய குறித்த பெண் 2ம் திகதி காணாமல் போயிருந்ததாக வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், வண்ணான் மடு பகுதியில் உள்ள வளவொன்றிலிருந்து புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித் துள்ளனர்.
ஐந்து பிள்ளைகளின் தாயான குறித்த பெண் கணவரை பிரிந்து பிள்ளைகளுடன் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார் என தெரிவித்த பொலிஸார், குறித்த பெண்ணின் சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள துடன், சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment