42 வயதான இரு பிள்ளைகளின் தாயை இழுத்துச்சென்று பாலியல் வல்லுறவு
கட்டுக்தோட்ட பிரதேசத்தில் 42 வயதான இரு பிள்ளைகளின் தாயொருவரை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்று பாழடைந்த வீடொன்றில் வைத்து பாலி யல் வல்லுறவுக்குட்படுத்திய மூன்று நபர்களை கைது செய்துள்ளதாக கட்டுகஸ் தோட்ட பொலிஸார் தெரிவித் துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, வைத்தியார் ஒருவரின் வீட்டில் தொழில் புரியும் குறித்த பெண் மாலை வேளையில் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, சன நடமாற்றம் அற்ற பகுதியில் வைத்து முச்சக்கரவண்டி ஒன்றில் வந்த மூவர் திடீர்என குறித்த பெண்ணை பலவந்தமாக முச்சக்கரவண்டியில் கடத்திச் சென்று வல்லுறவுக்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப் படுகின்றது.
குறித்த பெண் கட்டுகஸ் தோட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரையும் கண்டி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போது, நீதவான் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment