ஐ.நாவுக்கான ஆபிரிக்க ஒன்றியத்தைச் சேர்ந்த சமாதான தூதுவர்கள் 4 பேர் படுகொலை
சூடானில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் ஒன்றில் ஐக்கிய நாடுகளுக்கான ஆபிரிக்க ஒன்றியத்தைச் சேர்ந்த சமாதான தூதுவ ர்கள் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
சூடானின் மேற்கு பகுதியிலுள்ள டாபூர் நகரிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சூடானிலுள்ள சமாதான தூதுவர்களின் தலைமையகத்திற்கு அருகில் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தாக்குதலை மேற்கொண்டவர்களுக்கு எதிராக சூடான் அரசாங்கம் கடும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஐக்கிய நாடுகளுக்கான ஆபிரிக்க ஒன்றியத்தின் அமைதிப் பணியாளர்கள் வலியுறுத் தியுள்ளனர். கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் டாபூர் நகரில் 16 ஆயிரத்திற்கும் அதிகமான அமைதிப் பணியாளர்கள் சேவையாற்றி வருகின்றனர்.
சூடானில் இடம்பெற்று வரும் வன்முறைகளினால் இதுவரை 78 அமைதிப் பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதேவேளை அமைதிப் பணியாளர்களுக்கு எதிரான ஆயததாரிகளின் தாக்குதல் களுக்கு தென் சூடான் அரசாங்கம் மறைமுகமாக ஒத்துழைப்பு வழங்குதவாக சூடான் அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment