எரிக் சோல்ஹெய்மின் காலம் கடந்த ஞானம்! 30 வருடங்கள் பின் புரிந்து கொண்டார் பிரபாகரனை
தமிழ் மக்களின் மரணத்துக்கு பிரபா கரன்தான் காரணம் என்பதை எரிக் சோல்ஹெயிம் 30 வருடங்கள் கடந்த பின்னரே உணர்ந்துள்ளார் என்றும், ஆனால் எமது இராணுவத்தினர் இவரைப் பற்றி ஏற்கெனவே உணர்ந்து வைத்திருந்தனர் என தகவல் ஊடக த்துறை அமைச்ர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
பி.பி.சி. உலக சேவைக்கு எரிக்சோல்ஹெயிம் வழங்கிய பேட்டி தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள் விக்கு பதில் அளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்து ள்ளார்.
அவர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில், எமது நாடு தொடர்பான அக்கறை இலங்கை மக்களை விட சோல் ஹெயிமுக்கு இருக்க முடியாது என்பது எனது நம்பிக்கை உள்ளது என தெரிவித்துள்ளார். ஏனெனில் இலங்கை மக்களுக்கு பிரபாகரன் பற்றியும் சமாதான ஒப்பந்தம் பற்றியும் சமாதான காலப்பிரில் புலிகள் நடந்துகொண்ட விதங்கள் பற்றியும் நல்ல அனுபவம் உண்டு. எனவே இதுபற்றி மேலும் தெளிவுபடுத்த வேண்டிய தேவையில்லை என நினைக்கிறேன் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment