Thursday, October 11, 2012

இந்தியாவில் 3 மில்லியன் பெண் சிசுக்கள் கொல்லப்பட்டுள்ளனர்

இந்தியாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 2011 வரையிலான காலங்களில் 3 மில்லியன் பெண் சிசுக்கள் கொல்லப்பட்டதாக இந்திய புள்ளியல் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, இந்திய புள்ளியல் அமைப்பு மேலும் தெரிவிப்பதாவது,

இந்தியாவில் தினமும் 2000 பெண் குழந்தைகள் ஏதாவது ஒரு விதத்தில் படுகொலை செய்யப்படுகிறது. ஒரு வீட்டில் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தால் அதை அழிப்பதில் 54 சதவீதம் பேர் ஈடுபடுகின்றனர். இரண்டு பெண் குழந்தைகள் இருந்து 3 ஆவதாக பெண் குழந்தை பிறந்தால் 20 சதவீதம் பேர் அதை அழிப்பதில் ஈடுபடுகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக பிறந்த முதல் 6 வயதிலான பெண் குழந்தைகளின் எண்ணிக்கை முன்பை விட தற்போது குறைந்திருக்கிறது. அதாவது 1000 ஆண் பிள்ளைகளுக்கு 48 பெண் பிள்ளைகள் குறைவாகவே நாட்டில் காணப்படுகின்றனர்.

இதுதவிர நாட்டில் பெண்கள் கடத்தப்படுவது 43 சதவீதம் அதிகரித்துள்ளது. கற்பழிக்கப்படுவது 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன்படி கடந்த 2011 ஆம் ஆண்டில் 7, 112 வழக்குகள் பெண் பிள்ளைகள் கற்பழிக்கப்பட்டதற்காக பதிவானதாகும். இந்த வழக்குகளின் எண்ணிக்கை 2010 ஆம் ஆண்டில் 5, 484 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com