திருப்பதியில் 2-வது லட்டு வாங்குவோரை கண்டறிய கருவி - புரோக்கர்களை தடுக்க தேவஸ்தானம் திட்டம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதம் உலகப் புகழ் பெற்றது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூடுதலாக லட்டு வாங்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் லட்டு வழங்க வேண்டும் என்பதற்காக தரிசன டோக்கன் ஒன்றுக்கு கூடுதலாக 4 லட்டுகள் மட்டுமே தலா ரூ.25-க்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதனால் கூடுதல் லட்டு வாங்க விரும்பும் பக்தர்கள் புரோக்கர்களுக்கு அதிக பணம் கொடுத்து லட்டு வாங்கி செல்கிறார்கள். இதனால் அடிக்கடி லட்டு பிரசாதத்திற்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதைத் தொடர்ந்து லட்டு பிரசாதத்தை 2-வது முறையாக வாங்க வரும் பக்தர்கள் கண்டறிய நவீன கருவி பொருத்த தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.
இக்கருவியில் பொருத்தப்படும் “சாப்ட்வேர்” லட்டு கவுண்டருக்கு 2-வது முறையாக வரும் நபரை கண்டு பிடித்து அலாரம் எழுப்பும். அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரை எளிதில் பிடித்து விடுவார்கள். இந்த கருவி பொருத்தப்பட்டால் லட்டு கவுண்டருக்கு வரும் புரோக்கர்களை முற்றிலும் ஒழித்து விடலாம் என்று தேவஸ்தான அதிகாரி வெங்கட் ராமரெட்டி கூறினார்.
0 comments :
Post a Comment