கொடைக்கானலில் நகை கடையை உடைத்து ரூ.25 லட்சம் கொள்ளை
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அண்ணா சாலையை சேர்ந்தவர் ராமதாஸ். இவர் அதே பகுதியில் நகை கடை வைத்துள்ளார். நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றுவிட்டார். நள்ளிரவில் இவரது கடையை கொள்ளையர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். கடையில் இருந்த 65 பவுன் தங்க நகைகள் மற்றும் 15 கிலோ வெள்ளி நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர். கொள்ளை போன நகைகளின் மொத்த மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும்.
இன்று காலை கடையை திறக்க வந்த ராமதாஸ் கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது நகைகள் கொள்ளை போனது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து ராமதாஸ் கொடைக்கானல் போலீசில் புகார் செய்தார்.
உடனடியாக கொள்ளை நடந்த கடைக்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் கைரேகை நிபுணர்கள்,மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை கடையில் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
கொடைக்கானல் மெயின் பஜாரில் உள்ள நகை கடையில் கொள்ளை நடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 comments :
Post a Comment